-இரு கைகளிலும் ஒரு விரல் மட்டுமே- சாதனைக்கு ஊனம் தடையல்ல உயிரியல் பிரிவில் சாதித்த மாணவி - Yarl Voice -இரு கைகளிலும் ஒரு விரல் மட்டுமே- சாதனைக்கு ஊனம் தடையல்ல உயிரியல் பிரிவில் சாதித்த மாணவி - Yarl Voice

-இரு கைகளிலும் ஒரு விரல் மட்டுமே- சாதனைக்கு ஊனம் தடையல்ல உயிரியல் பிரிவில் சாதித்த மாணவி
பிறக்கும் போதே பல்வேறு உடல் உபாதைகளுடன் பிறந்த போதும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் 2.ஏ, 1 பீ. சித்தி பெற்று எதிர்காலத்தில் ஒரு வைத்தியத்துறைக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கண்டி பெண்கள் உயர் கல்லூரிமாணவி ஒருவர்.

செல்வி வத்சலா யசந்தி குமாரி என்பவர் பிறக்கும் போது வாய், நாசி போன்ற பிரதேசங்களிலும், இரண்டு கைகளிலும் குறைபாட்டுடனே பிறந்துள்ளார். பிறந்து மூன்று மாதத்தில் வாய், நாசி போன்றபகுதிகளுக்கு கண்டி வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன் பின் வாய்க்கு இன்னும் பல சத்திர சிகிச் சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு பிறந்தது முதல் இன்று வரை 27 சத்திர சிகிச்சைகளுக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். இறுதியாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு  இரண்டு மாதங்கள் இருக்கும் போது ஒரு சத்திர சிகிச்சைக்கும் முகம் கொடுத்துள்ளார்.

அவரது வலதுகையில் முழங்கைக்குக் கீழான பகுதியை காண முடியவில்லை. அதேநேரம் இடது கையின் கட்டை விரல் (பெருவிரல்) தவிர்ந்த ஏனைய விரல்கள் இல்லை. இப்படியான ஒரு நிலையில் குறித்த மாணவி உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

இவர் க.பொ.த. சாதாரண தரத்தில் 8 ஏ மற்றும் 1 பி சித்திகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post