யாழ் போதனா வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகம் உதவி - Yarl Voice யாழ் போதனா வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகம் உதவி - Yarl Voice

யாழ் போதனா வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகம் உதவி
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு நீர்கொழும்பு ஒறியன்ற் லயன்ஸ் கழகத்திலிருந்து போட்டியிடும் 2 ஆவது உப மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் பீற்றர் பழுதடைந்த சக்கரநாற்காலிகளைத் திருத்தம் செய்வதற்கும், புதிய நாற்காலிகளைக் கொள்வனவு செய்வதற்கும் என கடந்த திங்கட்கிழமை ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாவை வழங்கிி வைத்தார்.

வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் கணக்காளருமாகிய லயன் சிவரஞ்சனின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நிதி, யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தாவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அபேட்சகர் லயன் பிளஸிடஸ் டி பீற்றர், அனைத்து லயன் மாவட்டங்களுக்குமான தலைவர் லயன் தேவா டி பீற்றர், முன்னாள் ஆளுநர் லயன் எஸ்.சிவபாதசுந்தரம், நீர்கொழும்பு லயன்ஸ் கழக உறுப்பினர் லயன் சாவித்திரி பீற்றர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post