இந்தியாவில் இருந்து யாழுக்கு கஞ்சா கடத்தல் முறியடிப்பு -ஒருவர் கைது: 110 கி.கி.கஞ்சா மீட்பு- - Yarl Voice இந்தியாவில் இருந்து யாழுக்கு கஞ்சா கடத்தல் முறியடிப்பு -ஒருவர் கைது: 110 கி.கி.கஞ்சா மீட்பு- - Yarl Voice

இந்தியாவில் இருந்து யாழுக்கு கஞ்சா கடத்தல் முறியடிப்பு -ஒருவர் கைது: 110 கி.கி.கஞ்சா மீட்பு-இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கஞ்சாவை கடத்தி வந்த நபர் மாதகல் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 110 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாதகல் கடற்பரப்பில் கஞ்சா கடத்தி வருவது தொடர்பில் கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.

இதன் அடிப்படையில் இன்று கடற்படையின் அதிரடி நடவடிக்கையில் நான்கு மூடைகளில் 110 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட  படகும் கைபற்றப்பட்டுள்ளது. 

ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் மாதகல் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்  இளவாலை பொலிசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post