யாழ். சண்டிலிப்பாயில் தடையைமீறி திருமண வைபவம் 13 பேருக்கு கொரோனா உறுதி - Yarl Voice யாழ். சண்டிலிப்பாயில் தடையைமீறி திருமண வைபவம் 13 பேருக்கு கொரோனா உறுதி - Yarl Voice

யாழ். சண்டிலிப்பாயில் தடையைமீறி திருமண வைபவம் 13 பேருக்கு கொரோனா உறுதி
சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் அனுமதியின்றி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4 ஆம் திகதி சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வை நடாத்தினர்.

குறித்த நபர்கள் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 78 பேருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இன்று   13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து  குறித்த 13 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் திருமண வீட்டாரை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post