மீண்டும் ஐ.நா. செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் - 193 உறுப்பினர்கள் ஆதரவு- - Yarl Voice மீண்டும் ஐ.நா. செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் - 193 உறுப்பினர்கள் ஆதரவு- - Yarl Voice

மீண்டும் ஐ.நா. செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் - 193 உறுப்பினர்கள் ஆதரவு-ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும் அன்டோனியோ குட்டரெஸ்  தெரிவு செய்யப்படவுள்ளார்.

எதிர்வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தேர்வு செய்யப்படவுள்ளார். 

அன்டோனியோ குட்டரெஸ் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறுவியுள்ளது.

இந் நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்டரெஸை மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என 193 உறுப்பினர்கள் ஆதரவுடன் நேற்றைய உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தில் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

72 வயதாகும் போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டோனியோ குட்டரெஸ் ஐக்கிய நாடுகள் சபையின்  09 ஆவது பொதுச் செயலாளராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். 

இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

 அவர் இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டால் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை பதவியில் தொடருவார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post