இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கேரள கஞ்சா கடத்தல் முறியடிப்பு -237 கிலோ கஞ்சா மீட்பு: மூவர் கைது..! - Yarl Voice இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கேரள கஞ்சா கடத்தல் முறியடிப்பு -237 கிலோ கஞ்சா மீட்பு: மூவர் கைது..! - Yarl Voice

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கேரள கஞ்சா கடத்தல் முறியடிப்பு -237 கிலோ கஞ்சா மீட்பு: மூவர் கைது..!
இந்தியாவிலிருந்து பருத்தித்துறை  கடற்பரப்பால் கடத்திவரப்பட்ட  237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை  கடற்பரப்பில் இன்று அதிகாலை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, கரையை நோக்கி சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பது கண்டறியப்பட்டது. 

குறித்த படகை சோதனையிட்ட போது படகில் கேரள கஞ்சா கொண்ட இரண்டு சாக்குகளில் இருப்பது கண்டறியப்பட்டது.

கஞ்சாவை கைப்பற்றிய கடற்படையினர் படகில் இருந்த மூவரையும் கைதுசெய்தனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேக நபர்களால் கடலில் வீசப்பட்ட மேலும் ஆறு சாக்கு கேரள கஞ்சா மீட்கப்பட்டன.

08 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 237 கிலோ 500 கிராம் ஈரமான கேரள கஞ்சா கடற்படை கைப்பற்றியது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post