வடக்கில் 4 மாகாண வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்திடம் பறிபோகிறது - அமைச்சரவை அனுமதி வழங்கியது- - Yarl Voice வடக்கில் 4 மாகாண வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்திடம் பறிபோகிறது - அமைச்சரவை அனுமதி வழங்கியது- - Yarl Voice

வடக்கில் 4 மாகாண வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்திடம் பறிபோகிறது - அமைச்சரவை அனுமதி வழங்கியது-



மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகள் நான்கும் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கி மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதுவரை வடக்கு மாகாண சபையால் நிர்வகிக்கப்பட்டு வந்த குறித்த வைத்தியசாலைகள் மத்திய அரசின் வசம் செல்வது வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தலையிடமுடியாத  நிலையேற்படும்.

இவற்றை விட  மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா  மாவட்ட பொது மருத்துவமனைகளும் மத்திய  சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post