யாழில் ஜயாயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்! 87 பேர் உயிரிழப்பு - Yarl Voice யாழில் ஜயாயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்! 87 பேர் உயிரிழப்பு - Yarl Voice

யாழில் ஜயாயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்! 87 பேர் உயிரிழப்புயாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதென மாவட்ட 
 அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 
கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது இன்று மாலை வரை  யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5190 ஆக அதிகரித்துள்ளது.அதேநேரம் 87 ஆக கொரோராண மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4616 குடும்பங்களைச் சேர்ந்த 13793 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவும் யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69,ஜே,71 கிராம அலுவலர் பிரிவும் கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய் பகுதியும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

4150 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மிகுதியானவர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8297 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

யாழ் மாவட்டத்திற்கு கிடைத்துள்ள 50,000 தடுப்பூசிகளை இன்று தொடக்கம் முதல்தரம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது .

முதல்தரம் தடுப்பூசி பெற்ற நிலையங்களுக்கே சென்று தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
 
நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post