தீப்பிடித்த கப்பல் கடலில் மூழ்குகிறது -ஆழ்கடலுக்கு இழுத்து செல்லும் முயற்சி தோல்வி- - Yarl Voice தீப்பிடித்த கப்பல் கடலில் மூழ்குகிறது -ஆழ்கடலுக்கு இழுத்து செல்லும் முயற்சி தோல்வி- - Yarl Voice

தீப்பிடித்த கப்பல் கடலில் மூழ்குகிறது -ஆழ்கடலுக்கு இழுத்து செல்லும் முயற்சி தோல்வி-
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான  'எக்ஸ்-பிரஸ் பேர்ல்' கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது.

தீயில் எரிந்து கடுமையாக சேதமடைந்துள்ள அந்தக் கப்பலை ஆழ்கடல் நோக்கி இன்று புதன்கிழமை காலை இழுத்துச் செல்ல முயற்சிக்கப்பட்ட போதும், கப்பல் இழுத்துச் செல்லப்படும் போது சிறிது தூரத்தில் கப்பலின் பின்பகுதி கடற் பாறையில் மோதியதால் இழுத்துச் செல்லும் நடவடிக்கை இடைவழியில் கைவிடப்பட்டுள்ளது. கப்பலின் பின்பகுதியில் ஏற்பட்ட நீர் கசிவால் கப்பல் மூழ்கத் தொடங்கியுள்ளது.

இந்தக் கப்பல் முழுமையாக மூழ்கும் அபாயத்தில் இருக்கும் நிலையில் கப்பலில் இருந்து எரிபொருள் கசிவுகள் ஏற்பட்டால் கடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எரிபொருள் கசிவு ஏற்பட்டால் உடனடியாக செயற்படக் கூடிய வகையில் கடற்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இந்திய கடற்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை யெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை அந்தக் கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுத்துச் செல்லும் பணி ஆரம்பமானது.எனினும் கப்பலை சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லும் போதே கப்பலின் பின்பகுதியில் நீர் நிறைந்து ஒருபகுதி கடலில் மூழ்கி பாறைகளில் மோதியுள்ளது. இதனையடுத்தே  ஆழ் கடலுக்கு அதனை இழுத்துச் செல்லும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது .

0/Post a Comment/Comments

Previous Post Next Post