எங்கள் காதலை விஜய் நம்பவே இல்லை’ - பூவே உனக்காக சங்கீதா சரவணன் - Yarl Voice எங்கள் காதலை விஜய் நம்பவே இல்லை’ - பூவே உனக்காக சங்கீதா சரவணன் - Yarl Voice

எங்கள் காதலை விஜய் நம்பவே இல்லை’ - பூவே உனக்காக சங்கீதா சரவணன்
தங்களின் காதலை விஜய் நம்பவே இல்லை என ’பூவே உனக்காக’ பட நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் விக்ரமன் கூட்டணியில் முதன் முதலாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பூவே உனக்காக. வெகுஜன ரசிகர்கள் விஜய்யை மிகவும் விரும்ப இந்தப் படம் மிக முக்கியமானது. பூவே உனக்காக படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சங்கீதா.

அந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ, அதே அளவுக்கு சங்கீதாவின் துறு துறுப்பான நடிப்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 90-களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து அதிக ரசிகர்களைப் பெற்றிருந்தார் சங்கீதா. அவர் தொடர்ந்து அதிக படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு, சினிமாவை விட்டு விலகினார்.

சங்கீதா திருமணம் செய்துக் கொண்ட ஒளிப்பதிவாளர் சரவணன், பூவே உனக்காக படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். அந்தப் படத்தில் பணியாற்றும் போது காதலில் விழுந்து, வாழ்க்கையில் இணைந்தவர்கள். சில மாதங்கள் முன்பு முன்னணி ஊடகத்தின் நேர்க்காணலில் கலந்துக் கொண்ட சரவணன் - சங்கீதா தம்பதி, பூவே உனக்காக படத்தைப் பற்றிய தங்களின் நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.

அப்போது தாங்கள் காதலித்ததை விஜய்யும், இயக்குநர் விக்ரமனும் நம்பவே இல்லை என்பதைக் குறிப்பிட்டனர். தவிர சரவணன், விஜய்யின் செல்வா, மதுர, திருப்பாச்சி ஆகியப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதோடு தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களாக திகழும், விஜய் மில்டன், மதி, வெற்றி, மனோஜ் பரமஹம்சா ஆகியோர் இவரின் உதவியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post