பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை தனிமைப்படுத்த உத்தரவு - Yarl Voice பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை தனிமைப்படுத்த உத்தரவு - Yarl Voice

பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை தனிமைப்படுத்த உத்தரவுபோக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் பயணிப்பவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களை அந்த பகுதி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையுடன் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக அத்தியாவசியமற்ற தேவைகளிற்காக- உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி பயணிப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர்களை பொலிஸ் அதிகாரிகளால் தனிமைப்படுத்த முடியாது என்பதால் பொலிஸாரின் வேண்டுகோளின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள்  இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post