மாணவர்களுக்கான இணையவழிக் கல்வியை விருத்தி செய்வது தொடர்பில் யாழில் ஆராய்வு - Yarl Voice மாணவர்களுக்கான இணையவழிக் கல்வியை விருத்தி செய்வது தொடர்பில் யாழில் ஆராய்வு - Yarl Voice

மாணவர்களுக்கான இணையவழிக் கல்வியை விருத்தி செய்வது தொடர்பில் யாழில் ஆராய்வுயாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இணைய வழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இணைய வழியில் கற்றலை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டது.

அவை தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேசி உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் ,மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலர்களும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post