இங்கிலாந்து – நியூசிலாந்து டெட்ஸ் அறிமுக போட்டியில் நியூசி. வீரர் சதம் ! - Yarl Voice இங்கிலாந்து – நியூசிலாந்து டெட்ஸ் அறிமுக போட்டியில் நியூசி. வீரர் சதம் ! - Yarl Voice

இங்கிலாந்து – நியூசிலாந்து டெட்ஸ் அறிமுக போட்டியில் நியூசி. வீரர் சதம் !
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி கப்டன் கேன் வில்லியம்சன் துடுப்பாட்டத்தை; தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டேவன் கான்வே அறிமுகம் ஆன நிலையில், இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேஸ், ஒல்லி ராபின்சன் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

இங்கிலாந்து அணி ஆண்டர்சன், பிராட், ராபின்சன், மார்க் வுட் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. டாம் லாதம் டேவ் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

இந்த ஜோடி 16 ஓவர் வரை தாக்குப்பிடித்தது. டாம் லாதம் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 13, ரோஸ் டெய்லர் 14 ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அறிமுக வீரர் டேவன் கான்வே அபாரமாக விளையாடி 163 பந்தில் 11 தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

அவருடன் ஹென்ரி நிக்கோல்ஸ் பொறுப்புடன் விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணி 74 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை எடுத்துள்ளது, டேவன் கான்வே 121 ஓட்டங்களுடனும் ஹென்ரி நிக்கோல்ஸ் 33 ஓட்டங்களுடனும்  விளையாடி வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post