இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து முதலாவது டெஸ்ட் உலகக் கிண்ணம் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை - Yarl Voice இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து முதலாவது டெஸ்ட் உலகக் கிண்ணம் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை - Yarl Voice

இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து முதலாவது டெஸ்ட் உலகக் கிண்ணம் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை
கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலக கிரிக்கெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற உலகக்கிண்ண டெஸ்ட் சம்பியன் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது.

கடைசிநாளான இன்றைய ஆட்டத்தின்போது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்டன் கோலி 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க 

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. 

முதல் இன்னிங்சில் இந்தியா 217 ஓட்டங்களும் நியூசிலாந்து 249 ஓட்டங்களும்; எடுத்தன. 

32 ஓட்டங்கள்; பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை; எடுத்த நிலையில், 5 ஆவது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. 

புஜாரா 12 ஓட்டத்துடனும் கோலி  8 ஓட்;டத்துடனும் ; ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

6 ஆவது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்டன் கோலி 13¸புஜாரா 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து  ரகானே 15, ஜடேஜா 16 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷாப் பண்ட், 41 ஓட்டம் சேர்த்து ஆறுதல் அளித்தார். 

ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில்; ஆட்டமிழக்க, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 170 ஓட்டங்களுக்கு முடிவுக்கு வந்தது. 
 
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 139 ஓட்டங்கள்; எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாகிய லதம் 9, கொன்வே 19 ஓட்டத்தில் ஆட்டமிழக்க நியூசிலாந்து கப்படன் வில்லியம்சன் அனுபவ ஆட்டக்காரர் ரெயிரர் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்தியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்து வெற்றியை சுவைத்தனர்.

வரலாற்றில் முதன் முறையாக உலக டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை வென்ற அணி என்ற சாதனையையும் பெருமையையும் நியூசிலாந்து தன்வசமாக்கியது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post