கோலியா – டோனியா? இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் வெடித்தது டுவிட்டர் யுத்தம் - Yarl Voice கோலியா – டோனியா? இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் வெடித்தது டுவிட்டர் யுத்தம் - Yarl Voice

கோலியா – டோனியா? இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் வெடித்தது டுவிட்டர் யுத்தம்




ஐசிசி கிண்ணத்தை வெல்வதற்கு விராட் கோலி மீண்டும் தவறியுள்ளதை தொடர்நது அவரா எம்எஸ் டோனியா சிறந்த அணித்தலைவர் என்ற மோதல் டுவிட்டரில் மீண்டும் உருவாகியுள்ளது.
32 வயது கோலி மூன்றாவது தடவை ஐசிசியின் கிண்ணத்தை தவறவிட்டுள்ளார்.

2017 இல் சம்பியன்ஷிப்  கிண்ணத்தை தவறவிட்ட விராட்கோலி 2019 இல் உலக கிண்ணத்தை தவறவிட்டார் – நேற்று மீண்டும் இன்னொரு உலக கிண்ணத்தை அவரின் தலைமையின் கீழ் இந்திய அணி தவறவிட்டுள்ளது.

2011 இல் உலக கிண்ணத்தையும் 2013 இல் ஐசிசி சம்பியன்ஷிப் கிண்ணத்தையும் வென்ற டோனியின் அணியில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார்.

எனினும் விராட்கோலியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா இன்னமும் எல்லை கோட்டை கடக்கவில்லை.

சிலர் விராட்கோலியை தலைமை பதவியிலிருந்து நீக்கி துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த அனுமதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டுவிட்டரில் விராட்கோலியின் ரசிகர்களிற்கும் டோனியின் ரசிகர்களிற்கும் இடையில் யார் சிறந்த தலைவர் என்ற மோதல் உருவாகியுள்ளது.

பத்து ஐசிசி இறுதிப்போட்டிகளில்
டோனியின் தலைமைத்துவத்தின் கீழ்; நாளில் விளையாடி மூன்றில் வெற்றிபெற்றது – ஏனைய இந்திய அணிதலைவர்கள் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றார்கள் என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தலைமைத்துவ பல்கலைகழகத்தின் நிகரற்ற டீன் டோனி என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அவரது தலைமைத்துவ திறன் போட்டியின் போக்கை அறியும் தன்மை ஆகியவற்றிற்கு அருகில் யாரும் நெருங்க முடியாது என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அணியின் தலைவராகயிருந்து அதனை வழிநடத்துவது அனைவராலும் முடியாத விடயம் என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தலைமைத்துவத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய தருணம்,  என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
நேற்றைய இறுதிப்போட்டியில் யார் டோனியின் தலைமைத்துவத்தை தவறவிட்டீர்கள் என கேள்வி எழுப்பியுள்ள ஒருவர் விராட் சிறந்தவீரர் ஆனால் அவர் சிறந்த தலைவரில்லை என பதிவிட்டுள்ளார்.

எங்களிற்கு டோனி மாதிரி ஒரு தலைவர் அவசியம் என அவர் பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post