செல்வந்தர்களுக்கு சலுகைக் கொடுத்து, ஏழைகளுக்கு பசியைக் கொடுத்தது அரசாங்கம்! பாராளுமன்றில் ரணில் ஆவேசம் - Yarl Voice செல்வந்தர்களுக்கு சலுகைக் கொடுத்து, ஏழைகளுக்கு பசியைக் கொடுத்தது அரசாங்கம்! பாராளுமன்றில் ரணில் ஆவேசம் - Yarl Voice

செல்வந்தர்களுக்கு சலுகைக் கொடுத்து, ஏழைகளுக்கு பசியைக் கொடுத்தது அரசாங்கம்! பாராளுமன்றில் ரணில் ஆவேசம்


 
செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை கொடுத்து, ஏழைகளுக்கு பசியை இந்த அரசாங்கம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்க, சபையில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், நாடு இராணுவமயப்படுத்தலை நோக்கி நகர்வதாகவும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,
''100 கோடி டொலர் கடன் செலுத்த இருக்கிறது. இதனை எப்படி செலுத்துவது என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. அதற்கான திட்டமும் இல்லை. தற்போது சர்வதேச நாணயம் நிதியத்துடன் பேச்சு நடத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியம் கோடி 78 டொலர்கள் கிடைக்கும். சார்க் நிதியத்திடமிருந்து 40 டொலர் கிடைக்கும். பங்களாதேஸ் 20 கோடி டொலர் கிடைக்கும். எனினும், முழுமையாக கடன் பொறியில் இருந்து மீள முடியாது. எனவே, இதிலிருந்து மீள்வதற்கான என்ன வழி இருக்கிறது. ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் நடத்த வேண்டும். இதில் இணங்கவில்லை என்றால் என்ன வழி என்று கூறவேண்டும். உரம், எரிபொருள், கல்வி ஆகிய பிரச்சினைகள் இன்று பெருமளவில் தலைதூக்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால்,  அரசாங்கம் மட்டுமல்ல நாடாளுமன்றமும் இல்லாமல் போகும். கொவிட் தான் இதற்குக் காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. எனினும், இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எந்தத் திட்டம் இல்லை.

கொவிட் தடுப்பு விசேட படைப் பிரிவு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இப்படி முன்நோக்கி செல்ல முடியாது. எமது அரசியலமைப்பின் ஊடாக அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் இதற்கு பொறுப்பு இருக்கிறது. பிரதமரும் இருக்கிறார். அமைச்சர்களும் இருக்கின்றனர். பிரதமர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும். உங்களுக்கு பிழைத்தால், நாடாளுமன்றத்தில் அதனை நாம் சுட்டிக்காட்டுவோம். ஆனால் ஒரு திணைக்களத்தின் தலைவர் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அவருக்கு இருக்கும் தகுதி என்ன?. இராணுவத் தளபதியால் இதனை செய்ய முடியாது.

 எனவே பிரதமர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும். இராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது. இது பிழையானது. முதலீட்டுச் சபை மாநாட்டில் இராணுவத் தளபதி

0/Post a Comment/Comments

Previous Post Next Post