வடமேல் மாகாண மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice வடமேல் மாகாண மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

வடமேல் மாகாண மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்புசந்நிதியான் ஆச்சிரமத்தினால் வடமேல் மாகாண மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  மக்களுக்கு தொண்டைமானாறு சந்நிதியான்  ஆச்சிரமத்தினால் அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 புத்தளம் முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகம் சந்நிதியான் ஆச்சிரமத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க குறித்த உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சுமார் 70 குடும்பங்களுக்கு பகிந்தளிக்கக் கூடிய வகையில் குடும்பமொன்றுக்கு தலா 3500/= ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் புத்தளம் முத்துமாரியம் ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள்  புத்தளம் முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்திடம் பொருட்களை கையளித்தார்.  

இதேவேளை கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடுப்பிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள 30 குடும்பங்களுக்கும், வல்வெட்டித்துறை நகரசபையின் சுகாதார தொழிலாளர்கள் 30 பேரின் குடும்பங்களுக்கும் இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தினால் அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post