ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வலுக்கும் எதிர்ப்பு ! ஜப்பானில் அதிகரிக்கும் கோவிட் தொற்று ! - Yarl Voice ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வலுக்கும் எதிர்ப்பு ! ஜப்பானில் அதிகரிக்கும் கோவிட் தொற்று ! - Yarl Voice

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வலுக்கும் எதிர்ப்பு ! ஜப்பானில் அதிகரிக்கும் கோவிட் தொற்று !கோவிட் 19  பேரிடர் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது சாதாரணமான விடயம் அல்ல என ஜப்பானின் மூத்த சுகாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

 அதேநேரம் ஒலிம்பிக் போட்டிகளில் சேவையாற்ற இணைந்து கொண்ட தன்னார்வ தொண்டர்கள் பல்லாயிரம் பேர் போட்டிகளில் இருந்து விலக ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு அதிகளவிலான ஜப்பான்  மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து வரும் அதேவேளை கோவிட் தொற்றை கட்டுப்படுத்த அந்நாடு திண்டாடி வருகிறது. 

இன்னமும் ஏன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அரசு ஆர்வமாக உள்ளது என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் அரசாங்கம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post