யாழ் பல்கலை சித்த மருத்துவத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல் - Yarl Voice யாழ் பல்கலை சித்த மருத்துவத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல் - Yarl Voice

யாழ் பல்கலை சித்த மருத்துவத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்




யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சித்த மருத்துவ அலகின் 2019 / 2020 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புது முக மாணவர்களுக்கான இணையவழி திசைமுகப்படுத்தல் செயலமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

2019 / 2020 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டு, பல்கலைக்கழகத்தில் அனுமதிக்காகப் பதிவு செய்துள்ள சகல மணவர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு திசைமுகப்படுத்தல் செயலமர்வுக்கான இணைப்பு விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அனுமதிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகானது 1984 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு துறையாக உள்வாங்கப்பட்டு, தனி அலகாகத் துணைவேந்தரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கிவருகிறது. 

இந்த அலகினால் சித்த மருத்துவமாணி சத்திர சிகிச்சை மாணி பட்டத்தை வழங்குவதுடன் 36 வருடங்களுக்கு மேலாக 500 க்கும் அதிகமான சித்தமருத்துவர்களை உருவாக்கி அவர்களை இலங்கையில்; உள்ள அரச சித்த வைத்தியசாலை, கிராமியவைத்தியசாலை, இலவச சித்த வைத்திய நிலையங்களில் அரச சேவையில் ஈடுபட வழி வகுத்துக் கொண்டிருக்கின்றது. 

அதேநேரம் சித்த மருத்துவ அலகானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் சித்த மருத்துவபீடமாகத் தரமுயர்த்தப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றகரமான விடயமாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post