இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன்; தமிழகமுதல்வருக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் - Yarl Voice இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன்; தமிழகமுதல்வருக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் - Yarl Voice

இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன்; தமிழகமுதல்வருக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்
சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திருந்ததற்கு நன்றி தெரிவித்து ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னார் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து முதல்வர் மற்றும் விஐபிகளின் வருகையின்போது சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக மண்டல ஐஜி, ஆணையர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் “சாலையில் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன்.

பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார், நானும் வருந்தி இருக்கிறேன். 

அந்தவகையில் இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post