கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது பிசிஆர் சோதனைகள் ஐம்பது வீதத்தினால் குறைவடைந்துள்ளன- ஜேவிபி - Yarl Voice கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது பிசிஆர் சோதனைகள் ஐம்பது வீதத்தினால் குறைவடைந்துள்ளன- ஜேவிபி - Yarl Voice

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது பிசிஆர் சோதனைகள் ஐம்பது வீதத்தினால் குறைவடைந்துள்ளன- ஜேவிபிகடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது பிசிஆர் சோதனைகள் ஐம்பது வீதத்தினால் குறைவடைந்துள்ளன  என ஜேவிபி தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்த ஜயதிச இதனை தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தொடர்பான செயலணி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துள்ளது டெல்டா பிளஸ் ஆபத்தும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 3500 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டவேளை 28000 பிசிஆர் சோதனைகள் நாhளாந்தம் இடம்பெற்றன ஆனால் கடந்தவாரம் 14000 பிசிஆர் சோதனைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தற்போதைய நிலவரத்தை மதிப்பிடுவதற்காக அரசாங்கம் பிசிஆர் சோதனைகளை அதிகரிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார நிபுணர்கள் அடங்கிய செயலணியே அவசியம் தற்போதைய செயலணி அரசியல் ரீதியிலானமுடிவுகளை எடுப்பதற்காக புள்ளிவிபரங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post