தடுப்பூசி குறித்து வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice தடுப்பூசி குறித்து வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

தடுப்பூசி குறித்து வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல்



இலங்கையில் தொற்று அதிகம் எனத் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடங்குவதால் முன்னிலை அடிப்படையில் 50,000 சினோபாம் தடுப்பூசி முதற் கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

 சினோபாம் தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக மிக அரிதாகும். 
எனினும் சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு, மற்றும் வேறு 
ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் 05.06.2021 சனிக்கிழமைதடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி 
அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது 
ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
 
வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்
வடமாகாணம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post