தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி தாய் உட்பட 3 பெண்கள் அந்த சிறுவனை அடித்து கொன்றுள்ளனர்.
தற்போது இந்த மூன்று பெண்களையும் கண்ணமங்களம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்களம் பேரூராட்சியில் உள்ள ஒரு வளாகத்தில் சிறுவனை 3 பெண்கள் அடித்து துன்புறுத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
அதனடிப்படையில் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தச் சென்றனர்.
ஆனால், அதற்குள் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
பிறகு அந்த சிறுவன் அருகே இருந்த மூன்று பெண்களிடம் கண்ணமங்களம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
தன்னுடைய மகனுக்கு பேய் பிடித்து இருப்பதாகவும் அதை வந்தவாசியில் உள்ள முஸ்லிம் தர்காவில் இருப்பவர் விரட்டுவார் என்ற நம்பிக்கையுடன் தனது சகோதரிகளுடன் அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு தாயார் திலகவதி வந்துள்ளார்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவனுக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி தாய் உட்பட மூன்று பெண்கள் அவரை அடித்துத் தாக்கியுள்ளனர்.
இதன்போது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில் தாய் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்தனர். bbc tamil
Post a Comment