20 வயதில் திருமணம் செய்தது தவறு: நடிகை ரேவதி - Yarl Voice 20 வயதில் திருமணம் செய்தது தவறு: நடிகை ரேவதி - Yarl Voice

20 வயதில் திருமணம் செய்தது தவறு: நடிகை ரேவதி
நான் 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 20 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அப்படி அவசரப்பட்டு செய்திருக்கக்கூடாது என்று பின்னால் வருத்தப்பட்டேன். ‘புன்னகை மன்னன்’ படம் வந்த நேரம் அது. இன்னும் சில நல்ல படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்திருக்கலாம் என்று அப்புறம் உணர்ந்தேன்...’’ என்கிறார் ரேவதி.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண் வாசனை படம் மூலம் அறிமுகமான இவர், நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த ரேவதி தொடர்ந்து நடித்து வருகிறார். 

தனது திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’நான் பிளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னை பற்றி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், 'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, 'நான் நடிகையா?'ன்னு மிரண்டுபோய் 'அதெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார். 

'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது'ன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, 'ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்... 

என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன்.

 தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படி எல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்’. இவ்வாறு ரேவதி கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘நான் நடிப்பதற்கு கொஞ்சம் பதற்றப்பட்டது சிவாஜியுடன் ‘லட்சுமி வந்தாச்சு’ படத்தில்தான். அது ஒரு பாடல் காட்சி. அவர் கால்களை தொட்டு வணங்குவது போல் காட்சி. சிவாஜியுடன் நடிப்பதற்கு பதற்றப்பட்டது உண்மை...’’ என்றார்.

 ‘‘உங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சக போட்டியாளர் யார்?’’ என்ற கேள்விக்கு, ‘‘பூர்ணிமா பாக்யராஜ். அது செல்போன் வராத காலம். பூர்ணிமாவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 

என் நடிப்பை பாராட்டி அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் மறக்க முடியாது’’ என்று ரேவதி கூறினார். (‘‘ரேவதி, பூர்ணிமா, ஊர்வசி, ஷோபனா ஆகிய 4 பேரும் ஒரே சமயத்தில் திரையுலகுக்கு வந்தவர்கள்)

‘‘நீங்கள் நடித்து உங்களை கவர்ந்த பிற மொழி படங்கள் எவை?’’ என்ற கேள்விக்கு, ‘‘மலையாளம், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் எனக்கு சில மறக்க முடியாத படங்கள் அமைந்தன’’ என்று ரேவதி பதில் அளித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post