டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை சீன வீரங்கனை யாங் கியான் சுவீகரித்தார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (10m air rifle) துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் தங்கத்தை யாங் கியான் பெற்றார்.
இந்தப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும் சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
Post a Comment