கடந்த 20 ஆண்டுகளில் வாய்ப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதார அமைச்சு - Yarl Voice கடந்த 20 ஆண்டுகளில் வாய்ப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதார அமைச்சு - Yarl Voice

கடந்த 20 ஆண்டுகளில் வாய்ப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதார அமைச்சு



கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் வாய்ப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 09 மடங்கு அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாக்கு பயன்பாடே இதற்கு முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரிவின் தகவல் படி,  ஆண்கள், பெண்களுக்கு பொதுவான 10 புற்றுநோய்களில் வாய்ப்புற்று நோயும் ஒன்றாகும். 

மேலும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் சுமார் 2,700 புதிய வாய்ப்புற்று நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர். 

வாய்ப்புற்று நோய் தொடர்பில் இரண்டு அல்லது மூன்று இறப்புகள் தினமும் நிகழ்கின்றன.

வாய்ப்புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post