சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்சியில் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறிய யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 40 ஏக்கர் கடலட்டைப் பண்ணை அமைக்க சீனாவுக்கு கொடுக்கப்படவுள்ளது எனவும், நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்தபின் கச்சேரிக்கு முன் உள்ள பழைய ஒல்லாந்தர் கட்டமும் சீனாவுக்கு விற்கப்படவுள்ளதாம் என கூறியிருந்தார்.
இது தொடர்பில் வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற அரச இணைப்பாளர் கீத்நாத் காசிலிங்கம் இதுதொடர்பில் அதிகாரிகளிடம் வினவியபோது ஸ்ரீதரன் கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும்,
நெடுந்தீவில்உள்ள எந்த நிலத்தையும் அல்லது பழைய யாழ்ப்பாண கச்சேரி கட்டிடத்தையும் எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்க எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment