திருமணத்தில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா - யாழில் 64 பேர் தனிமைப்படுத்தல்- - Yarl Voice திருமணத்தில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா - யாழில் 64 பேர் தனிமைப்படுத்தல்- - Yarl Voice

திருமணத்தில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா - யாழில் 64 பேர் தனிமைப்படுத்தல்-
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே-276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் கலந்துகொண்ட மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை 56 பேர் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்

அதேவேளை, குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post