ஜப்பானின் டோக்கியோவிற்கு தென்கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரையோர நகரமான அற்ராமியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரைமீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இவ்வனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ள அதேவேளை வீடுகளும் வீதிகளும் கற்களுக்குள்ளும் சேற்றுக்குள்ளும் புதையுண்டுள்ளன.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில் சுனாமி எரிமலை வெடிப்பு போன்ற ஜப்பானை சூறையாடும் இயற்கை அனர்தங்களில் ஒன்றாக இந்நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க 1500க்கும் மேல்பட்ட மீட்பு பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ள அனைவரையும் மீடபதே தமது குறிக்கோள் என ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
Post a Comment