ராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் சீனா மற்றும் வடகொரியா ! - Yarl Voice ராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் சீனா மற்றும் வடகொரியா ! - Yarl Voice

ராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் சீனா மற்றும் வடகொரியா !சீனாவும் வட கொரியாவும் தமக்கிடையே செய்யப்பட்ட  நட்புரிமை ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் வலுவான செய்திகளை பரிமாறியுள்ளன என வடகொரியா செய்தி ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.  

வெளிநாட்டு படைகளின் எதிர்ப்புகளை சமாளிக்க தமக்கிடையே வலுவான நடப்புறவு அவசியம் என வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்த அதேவேளை தமது கூட்டுறவை புதிய  நிலைக்கு எடுத்து செல்ல உறுதியளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது 

1961 இல் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்  பிரகாரம் சீனாவின் ஒரே ஒரு பிரதான நடப்பு நாடக விளங்குகிறது  வடகொரியா. அணு ஆயுத மற்றும் நாசகார ஏவுகணை உற்பத்தி திட்டத்திற்காக வடகொரியா மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகளின் பின் வர்த்தக தேவைகளுக்காகவும் , உதவிகளுக்காகவும் சீனா மீது அந்நாடு அதிகளவு தங்கியுள்ளது.

சமீப காலமாக உலகளாவிய ரீதியில் இவ்விரு நாடுகளின் மீதான எதிப்பலைகள் அதிகரித்து வரும் நிலையில் தமக்கிடையேயான நடப்புறவை அவை மேலும் இறுக்கமாகி கொண்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post