யாழ் குடாநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு வர்த்தக சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice யாழ் குடாநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு வர்த்தக சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice

யாழ் குடாநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு வர்த்தக சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்
யாழ் குடாநாட்டில் கடல் வாழ் உயிரினங்களான நண்டு, இறால், கணவாய், கடலட்டை, கடல் தாவரங்கள், மீன் இனங்கள், மட்டிவகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான பண்ணைகள் அமைப்பதற்கு ஆர்வமுள்ள 
முதலீட்டாளர்கள் , முயற்சியாளர்களை ஈடுபடுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டு ;க்கொள்கின்றது. 

இதன் மூலம் எமது வளங்களைப் பயன்படுத்தி எமது பொருளாதாரத்தை உயர்த ;தக் கூடிய ஒரு அரிய சந்தர்ப ;பம் எமக்குக் கிடைத்துள்ளது. அத்துடன் எமது பகுதிகளைச் சேர்ந்த பல பேருக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்க முடியும்.

இந்தப் பண்ணைகள் அமைப்பது தொடர்பாக சில வழிமுறைகளையும ;, ஆலோசனைகளையும் வழங்க யாழ் வணிகர் கழகம் தயாராக உள்ளது. இந்தப் பண்ணைகள் அமைப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சில பின்வருமாறு. 

1. குடாநாட்டினைச் சேரந்த பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தமான இடங்களை 
அடையாளங் காணுதல். 

2. அவ் இடம் தொடர்பான சாதக பாதகங்களை தேசிய கடல்வாழ் உயிரின அதிகார சபை ஊடாக 
உறுதிப்படுத்தி சிபாரிசினைப் பெற்றுக் கொள்ளல் ( Nயுஞனுயு )

3. திட்ட வரைபு, புPளு படம் சமர்ப்பித்தல் ( சுலபமாகத் தயாரிக்கக் கூடிய முறை தொடர்பான விளக்கம் 
அளிக்கப்படும். )

4. கடற்றொழில் அமைச்சின் ஊடாக உரிய அனைத்துத் திணைக்களங்களின் கள விஜயம் ஒன்றின் கண்காணிப்பின் முலம் அனுமதிகள் பெறுவதை ஒரே நாளில் உறுதிப்படுத்திக் கொள்ளல். (பிரதேச 
செயலகம், கடற்றொழில் திணைக்களம், கரையோரப்பாதுகாப்பு திணைக்களம ;, கடல்வாழ் உயிரின அதிகார 
சபை)

5. உரிய பிரதேச கடற்தொழில் சங்கத ;திடம் ஆட்சேபனை இல்லை என கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரின் ஊடாக சிபாரிசுக் கடிதம் பெறுதல் 

6. பொருத்தமான இடங்களை தெரிவு செய்து அந்த இடங்களைப் பெறுவதற்காக சம்மந்தப்பட்ட பிரதேச 
செயலரிடம் கோரிக்கைக் கடிதம் கையளித்தல். 

7. கரையோர பாதுகாப ;பு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளல் 

8. மேற் சொன்ன அனுமதிகளுடனும் மேற்குறிப்பிட்ட அனுமதிகளுடன ; தேசிய கடல்வாழ் உயிரின அதிகார 
சபையினை அணுகி இறுதி அனுமதிப ;பத்திரத்தை பெற்றுக்கொள்ளல் 

9. தனியார் காணிகளிலும் அபிவிருத்தியை மேற் கொள்ள தேசிய கடல்வாழ் உயிரின அதிகார சபையினை 
அணுகி தேவையான அனுமதிகள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்

10. சூழலுக்கு இசைவான அனைத்து வளர்ப்பு நடவடிக்கைக்கும் உரிய அனுமதிகள் மற்றும் ஆலோசனைகளை 
அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து வழங்கப்படும்.

மேற் குறிப்பிட்ட அனுமதிகளுடன ; நீங்கள் விரும்பும ; பிரதேச செயலகர் பிரிவுகளில் இனங்காணப்பட்ட இடங்களில் நீங்கள் கடல் வாழ் உயிரினங்களின் பண்ணைகளை அமைக்க முடியும். 

இது வடமாகாணத்தைச் சேர்ந்த மூன்று 
பக்கமும் கடலால் சூழப்பட்ட சிறந்த வளங்களைக் கொண்ட எமது பிரதேசத்திற்கு ஒரு சிறந்த முதலீடாக நாம் கருதுகிறோம். 

இதன் மூலம் எமது வளங்களைக் கொண்டு எமது பிரதேசத்தைப ; பொருளாதார ரீத Pயில் முன ;கொண்டு 
செல்ல முடியும். எனவே இச ; சந்தர்ப ;பத்தை வடமாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும், தொழில் 
முயற்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொள்கின்றது. 

நன்றி
தலைவர் செயலாளர் 
 இ.ஜெயசேகரன் ச.சிவலோகேசன

0/Post a Comment/Comments

Previous Post Next Post