றிசாட் பதியூதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் - Yarl Voice றிசாட் பதியூதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் - Yarl Voice

றிசாட் பதியூதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்நாடாளுமன்ற உறுப்பினர்  றிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டி  யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து  நிலையத்திற்கு முன்னால் மலையகத்தைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது தங்கையின் இறப்பிற்கு நீதி வேண்டும் ஜனாதிபதி குறித்த சிறுமி உயிரிழப்பு தொடர்பில் நேரடியாக தலையிட்டு சிறுமியின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் மற்றும் சிறுமியின் மரண விசாரணை அறிக்கை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனக்கோரி குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post