யாழ் மாநகர திண்மக்கழிவு அகற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுடன் (சூப்பர்வைசர்) யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் விசேட சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
புதிய திண்மக்கழிவு அகற்றும் நடைமுறை தொடர்பில் போதிய முன்னேற்றம் இல்லை என்றும் இனிவருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் சிறப்பாக செயற்பட வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார்.
இதுவரை காலமும் நடைபெறும் தவறுகளையும் சுட்டிக்காட்டிய முதல்வர் இனிமேல் இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் மிக கடுமையான நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி எற்படாலாம் என எச்சரித்தார்.
ஆகவே எமது நகரின் தூய்மையாக வைத்திருக்க எமது கடமையை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் யாழ் மாநகர முதல்வர்யுடன் மாநகர ஆணையாளர் பொறியியலாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனார்.
Post a Comment