1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் இந்திய, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணி இதுவரை ஒரு தொடரையும் கைப்பற்றவில்லை.
குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்கள் எல்லாம் விளையாடிய காலத்திலிருந்து இன்றுவரை இலங்கை அணியால் 23 வருடமாக இந்தியாவை ஒருநாள் தொடரில் வீழ்த்த முடியாத சோதனை தொடர்கிறது.
இதைவிடவும் இந்திய அணி நேற்றைய ஒரு நாள் போட்டியில் உலக சாதனையைப் படைத்திருக்கிறது.
ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஒரு குறித்த அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட அணி என்கின்ற உலக சாதனை இந்தியா நேற்றையதினம் வசமானது.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராகவும், அவுஸ்திரேலியா அணி நியூஸிலாந்து எதிராகவும் அதிகபட்சமாக 92 வெற்றிகளைப் பெற்றுக்கொண்டன .
இலங்கைக்கு எதிராக இந்தியா நேற்று பெற்றுக்கொண்ட வெற்றி 93 ஆவது வெற்றியாகும்.
இதன்மூலம் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய வசமாக இருந்த சாதனையை தகர்த்து இந்தியா உலக சாதனை படைத்திருக்கிறது.
ராகுல் ராவிட் பயிற்சியாளராக வந்த முதல் போட்டியிலேயே கலக்கியிருக்கின்றார்.
Post a Comment