கடைசியாக எப்போது அழுதீர்கள்?".. நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில் என்ன தெரியுமா? - Yarl Voice கடைசியாக எப்போது அழுதீர்கள்?".. நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில் என்ன தெரியுமா? - Yarl Voice

கடைசியாக எப்போது அழுதீர்கள்?".. நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில் என்ன தெரியுமா?



கொரோனா தொற்றுநோய் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. உலகளவில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய நோய்க்கு பலியானதால், இது உலகில் உள்ள ஒவ்வொரு தனி நபரையும் பாதித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

 கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை பொறுத்தவரை, இந்த தொற்றுநோய் அவரை உணர்ச்சி ரீதியாகவும் பாதித்துள்ளது.

 கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கிலுள்ள கூகுள் தலைமையகத்தில் பிபிசியுடன் நடந்த நேர்காணலில் சுந்தர் கலந்துகொண்டார்

அதில் இலவச மற்றும் ஓபன் இன்டர்நெட் அச்சுறுத்தல் உட்பட பல தலைப்புகள் பற்றி அவரிடம் விவாதிக்கப்பட்டது. மேலும் நூற்றாண்டின் அடுத்த காலாண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவை உலகில் மேலும் புரட்சியை ஏற்படுத்தும் என்று அவர் கருதும் இரண்டு முன்னேற்றங்களை பற்றியும் விளக்கினார். 

இந்த நேர்காணலின் போது ​​அமோல் ராஜன் என்ற பத்திரிகையாளர் சுந்தர் பிச்சையிடம் கேட்டதாவது, " நீங்கள் கடைசியாக அழுத நேரம் எப்போது? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, “COVID இன் போது உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த பிணங்கள் அடங்கிய லாரிகளைப் பார்த்தேன்.

கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தேன். ஏப்ரல் முதல் மே மாதங்களில் இந்தியா இரண்டாம் அலை காரணமாக ஒரு கொடிய பாதிப்பில் சிக்கியது. 

மேலும் இந்த வைரஸ் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது மற்றும் கங்கை ஆற்றில் விடப்பட்ட இறந்த உடல்களின் புகைப்படங்கள், நூற்றுக்கணக்கில் எரிக்கப்பட்ட சடலங்களின் வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை கண்டேன். நான் ஒரு அமெரிக்க குடிமகன், ஆனால் இந்தியா எனக்குள் ஆழமாக உள்ளது. நான் யார் என்பதில் இது ஒரு பெரிய பகுதியாகும் "என்று பிச்சை தனது மனம் திறந்து பேசினார்.

தமிழ்நாட்டில் பிறந்து சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சை, இந்தியா அவரின் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் தான் யார் என்பதில் இது ஒரு பெரிய பகுதி என்றும் கூறினார். மேலும் அந்த நேர்காணலில் பேசிய அவர், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததையும் வெளிப்படுத்தினார்.

 மேலும் காத்திருக்கும் பட்டியலில் இருந்த பழைய ரோட்டரி தொலைபேசியிலிருந்து, அவர்கள் அனைவரும் மாதாந்திர இரவு உணவிற்கு குவிந்த ஸ்கூட்டர் வரை பல்வேறு தொழில்நுட்பங்கள் தன் மீது மாற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதையும் கூறினார். "வளர்ந்து வரும், தொழில்நுட்பம் எனக்கு வெளியே உள்ள உலகத்திற்கு ஒரு கதவை திறந்தது. இது ஒரு குடும்பமாக எங்களை ஒன்றிணைத்தது.

ஒவ்வொரு மாலையும் தூர்தர்ஷனின் ‘சரே ஜஹான் சே அச்சா’ சிறப்பு நிகழ்ச்சியால் தொலைக்காட்சிக்கு ஈர்க்கப்பட்டோம். இதை நான் எனது சகாக்களுக்கு மறுநாள் விளக்க முயன்றேன். ஆனால் இறுதியில் நண்பர்களுக்கு விளக்குவதை விட்டுவிட்டு அதை யூடியூபில் காண்பித்தேன், "என்று அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு நேர்காணலின் போது கூறினார்.

 மேலும் பேசிய அவர், “நான் இளமையாக இருந்தபோது, ​​ஒவ்வொரு புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் கற்றுக்கொள்ள புதிய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. ஆனால் அது வேறொரு இடத்திலிருந்து வரும் வரை நான் எப்போதும் காத்திருக்க வேண்டியிருந்தது.

இப்போது, இந்தியாவில் உள்ளவர்கள் தொழில்நுட்பம் தங்களிடம் வருவதற்கான வாய்ப்புக்காக இனி காத்திருக்க வேண்டியதில்லை. இந்தியாவில் ஒரு புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் தற்போது நடக்கின்றன, "என்று அவர் கூறினார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற விர்ச்சுவல் மாநாட்டில், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர அமெரிக்காவுக்கு இந்தியாவை விட்டு வெளியேறிய போது தான் சந்தித்த சவால்களை பற்றி விவரித்தார்.

அப்போது பேசிய அவர், " அமெரிக்க செல்ல என் விமான டிக்கெட்டிற்காக எனது தந்தை ஒரு வருட சம்பளத்திற்கு சமமான தொகையை செலவிட்டார். அதனால் நான் ஸ்டான்போர்டில் சேர முடிந்தது. ஒரு விமானத்தில் பயணித்தது எனக்கு அதுவே முதல்முறை, "என்று பிச்சை கூறினார். இறுதியில் அவர் கலிபோர்னியாவில் தரையிறங்கியபோது, ​​அவர் நினைத்தபடி எந்த விஷயங்களும் நடக்கவில்லை.

அவர் கூறியதாவது, “அமெரிக்கா விலை உயர்ந்தது. வீட்டில் உள்ளவர்களிடம் தொலைபேசியில் பேச ஒரு நிமிடத்திற்கு 2 டாலருக்கும் அதிகமாக செலவானது. இந்தியாவில் என் அப்பா வாங்கும் மாத சம்பளத்தைப் போலவே செலவாகும் என்று அவர் விவரித்தார்.

 கலிஃபோர்னியா மாநிலத்திற்கு முதன்முதலில் சென்றபோது,​​வரவிருக்கும் மாற்றங்களை பற்றி கொஞ்சம் கூட நினைக்கவில்லை" என்று கூறினார். "அங்கிருந்த போது எனக்கு கிடைத்த ஒரே விஷயம் தொழில்நுட்பத்தின் மீதான ஆழ்ந்த ஆர்வம், திறந்த மனது" என்று கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post