எனது தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் - ஹிருணிகா குற்றச்சாட்டு - Yarl Voice எனது தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் - ஹிருணிகா குற்றச்சாட்டு - Yarl Voice

எனது தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் - ஹிருணிகா குற்றச்சாட்டுபோலியான இணையத்தளமொன்றை நடத்தும் சிலர் தன்னுடைய தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என ஹிருணிகா பிரேமசந்திர குற்றம்சாட்டியுள்ளார்.

அழகான பெண்ணொருவரை தொடர்புகொள்வதற்கான இலக்கமாக எனது தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளனர் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

இவர்கள் முகநூலில் இருந்து அழகான  யுவதிகளின் படங்களை தரவிறக்கம் செய்கின்றனர் பின்னர் அந்த படங்களில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கம் என எனது தொலைபேசி இலக்கம்உட்படபலரது தொலைபேசி இலக்கத்தினை  வெளியிட்டுள்ளனர் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டபோதே இது எனக்கு தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் யார் என்பதை அவருக்கு தெரிவித்ததும் அவர் மன்னிப்பு கோரினார் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டாம் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 ஆரம்பமான பின்னர் குடும்பவன்முறைகள் அதிகரித்துள்ளன பல பெண்கள் இணையவெளியில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post