ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிப்பு - Yarl Voice ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிப்பு - Yarl Voice

ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிப்புஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பல்கலைக்கழக  ; சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயம் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டு நிதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் தனிமைப்படுத்தலை முன்னிட்டு பல்வேறு போராட்டங்களில் எதிர்கட்சியினர் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குரல் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post