பலவந்தமாக தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது- ரணில் - Yarl Voice பலவந்தமாக தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது- ரணில் - Yarl Voice

பலவந்தமாக தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது- ரணில்
தனிநபர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது என ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள ரணில்விக்கிரமசிங்க பிசிஆர் சோதனைகளை முன்னெடுக்காமல்எவரையும் தனிமைப்படுத்தலிற்கு அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டங்கள் தனிநபர்களை காரணமின்றி தனிமைப்படுத்தலிற்கு அனுப்புவதற்கு அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலின் நன்கறியப்பட்டவர்,ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்டவர், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முன்னிலையில் இந்த விவகாரம் ஒலிக்ககூடும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சட்டங்கள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள அவர் நிதியமைச்சர் இது குறித்து தொழி;ற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இலங்கை குறித்து சர்வதேச சமூகம் கொண்டுள்ள சாதகமானகருத்துக்களை இல்லாமல்போகச்செய்துவிடும் எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post