பசில் ராஜபக்சாவிற்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூஜை வழிபாடு - Yarl Voice பசில் ராஜபக்சாவிற்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூஜை வழிபாடு - Yarl Voice

பசில் ராஜபக்சாவிற்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூஜை வழிபாடு
யாழ்ப்பாணத்தில்  அமைச்சர்  பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது .

கலாநிதி யோகராஜன்  அறக்கட்ட அமைப்பின்  யாழ்  மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின்  ஏற்பாட்டில் பிள்ளையார் இன்  தனியார் விடுதியில்   சுப நேரத்தில்  இன்று  பாராளுமன்ற உறுப்பினராக 
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ள நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஐபக்சவின்  சகோதரன் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி  யாழில் விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது 

  இந்து பௌத்த கிறிஸ்தவ மதகுருக்களின்  பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது

குறித்த பூசை வழிபாட்டில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர் 
 தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தீவிர நிலை  காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டவர்களோடு பூசை வழிபாடுகள் சிறப்பாக  இடம்பெற்றது.

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்  இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post