தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை - இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு! - Yarl Voice தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை - இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு! - Yarl Voice

தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை - இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு!ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை  மீராபாய் சானு வென்று உள்ளார்.

இந்த பிரிவில் சீனாவின் ஹூ ஜிஹுய் ஒரு ஒலிம்பிக் சாதனையை உருவாக்கி  தங்கம் வென்றார். இந்தோனேசிய வீராங்கனை  கான்டிகா ஐசா வெண்கல பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால் அவரது பதக்கம் பறிக்கப்படும் அடுத்த இடத்தில் இருக்கும்  மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post