பட்டத்தின் நூலினால் தாயும் மகளும் பலி...!! - Yarl Voice பட்டத்தின் நூலினால் தாயும் மகளும் பலி...!! - Yarl Voice

பட்டத்தின் நூலினால் தாயும் மகளும் பலி...!!



பட்டத்தின் நூலில் சிக்கி விபத்து ஏற்பட்டதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூஸ்ஸ பிடிவெல்ல பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயதுடைய தாயும் அவரது 2 வயது மகளுமே உயிரிழந்துள்ளனர். 

நேற்றைய தினம் இரவு நடைபெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

காலியில் இருந்து ஹிக்கடுவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அவர்கள் பயணித்த போது, காற்றில் பறந்து கொண்டிருந்த பட்டம்  ஒன்றின் நூல் குறுக்கிட்டதால் , மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. 

குறித்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post