தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில் சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் - கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை - Yarl Voice தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில் சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் - கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை - Yarl Voice

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில் சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் - கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை



சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்  கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கோமகன் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுமாறு கோரி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கைதிகளின் உறவினர்கள் இணைந்து கடிதமொனறை அனுப்பி வைத்துள்ளோம்.

ஆகவே கைதிகளின் விடுதலை யில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டுடன் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது.

அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பல கைதிகள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள் அதேபோன்று ஏனைய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை விரைந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென நாம் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொல்ல வந்த வரை மன்னித்து விடுவித்து இருக்கின்றார். அதேபோன்று தன்னை கொல்ல வந்த வரையும் விடுவிக்குமாறு முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவும் தற்போது தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறான நிலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் கொல்ல முயற்சித்ததாக குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஆகவே தென்னிலங்கையில் தம்மைக் கொல்ள வந்தவர்கள் என்ற குற்றச்சாட்டபட்டவர்களை தாமே மன்னிப்பு அளித்து விடுதலை செய்தும் தற்போதும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்ற நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் தமது சக பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை முதலில் விடுவிக்க வேண்டும் என கோர வேண்டும்.

ஆகவே தன்னை கொலை செய்ய முயன்றதாக கூறி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடுவித்து தமது நல்லெண்ணத்தை சுமந்திரன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இவ்வாறு சிறையிலுள்ள அனைத்து கைதிகளையும் பாகுபாடின்றி விடுதலை செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒருமித்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post