அமரிக்க கோபா கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பெரு அணியை 1:0 என்ற கோல்கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்று இயிறுதிக்குள் நுழைந்தது.
47 ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது.
10 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.
அதிகாலை நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் பெரு – பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டி இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மோதின.
35 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மார் தட்டிக்கொடுத்த பந்தை அசிஸ்ட் கோலாக மாற்றினார்.
இதனையடுத்து பெரு அணி கோல்போடுவதற்கு கடுமையாக போராடியபோதும் பிரேசில் பின்கள வீரர்கள் சிறப்பாக தடுப்பட்டத்தில் ஈடுபட்டதால் பெரு அணியால் கோல் போடமுடியவில்லை.
இறுதியில் பிரேசில் அணி 1:0 என பெரு அணியை தோற்கடித்து இறுதிக்குள் கால் பதித்தது.
இரண்டாவது அரையிறுதி நாளை காலை 6.30 மணிக்கு ஆர்ஜென்ரீனா - கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Post a Comment