டயகம சிறுமி தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை - Yarl Voice டயகம சிறுமி தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை - Yarl Voice

டயகம சிறுமி தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த வாக்குமூலத்தையும் வழங்கவில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் முடித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இன்னொரு நபரே என்ன நடந்தது என வாக்குமூலம் வழங்கினார் என மருத்துவர்களே குறிப்பிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது நிபுணர்களின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post