துமிந்த சில்வா விடுதலைக்கு எதிராக நீதிமன்றம் சென்றார் ஹிருணிகா - Yarl Voice துமிந்த சில்வா விடுதலைக்கு எதிராக நீதிமன்றம் சென்றார் ஹிருணிகா - Yarl Voice

துமிந்த சில்வா விடுதலைக்கு எதிராக நீதிமன்றம் சென்றார் ஹிருணிகாமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனா திபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைச் சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை அரசியலமைப்புக்கு விரோதமாக அறிவிக்கக் கோரி உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியால் முன்வைத்த உத்தரவை இரத்து செய்யு மாறும் ஹிருணிகா பிரேமச்சந்திர உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post