அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் - சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் - நிராகரித்தார் மைத்திரி - Yarl Voice அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் - சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் - நிராகரித்தார் மைத்திரி - Yarl Voice

அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் - சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் - நிராகரித்தார் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும் என கட்சியின் மத்திய குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் நேற்றிரவு  இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கட்சிஅரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என  பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான உடனடி நடவடிக்கைகளை கட்சி எடுக்கவேண்டும் என சில உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பசில் ராஜபக்ச அமைச்சரான பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவது அதிகரிக்கும் என மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post