முழுமையான பாடத்திட்டங்கள் நிறைவடையாத நிலையிலும் ஒன்லைன் கற்றலில் சிக்கல்கள் காணப் படும் சூழலிலும் பரீட்சை குறித்து ஒரு முடிவை எவ்வாறு எட்டினீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இக்கேள்வியை முன்வைத்தார்.
மேலும் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை சில மாதங்களுக்குள் முடிக்க முடியுமா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி யெழுப்பினார்.
பாடத்திட்டங்களை முடித்த பின்னர் பரீட்சைகள் குறித்து முடிவு எட்டுவதே புத்திசாலித்தனமானது என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தடுப்பூசியை மாணவர்களுக்கு வழங்கு வதற்கான எந்தவொரு திட்டமும் இல்லாத நிலையில் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்றும் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பினார்.
Post a Comment