இங்கிலாந்து இளம் புயல்களிடம் மீண்டும் மண்கவ்விய பாகிஸ்தான் - Yarl Voice இங்கிலாந்து இளம் புயல்களிடம் மீண்டும் மண்கவ்விய பாகிஸ்தான் - Yarl Voice

இங்கிலாந்து இளம் புயல்களிடம் மீண்டும் மண்கவ்விய பாகிஸ்தான்




இங்கிலாந்தின் இரண்டாம் தர அணியிடம் மீண்டும் அடிவாங்கிய பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டி தொடரையும் இழந்துள்ளது.

இங்கிலாந்து  - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில் பாகிஸ்தான் 52 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இழந்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 247 ஓட்டங்களை குவித்தது.

பில் சால்ட் - 60, ஜேம்ஸ் வின்ஸ் - 56,  லூயிஸ் கிரிகோரி – 40 ஓட்டங்களை பெற்றனர்.

இங்கிலாந்துக்கு எதிராக ஹசன் அலி கெற்றிக் உடன் 5 விக்கெட்டுகளை வீழத்தினார்.

248 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 41 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டையும் இழந்து 52 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் ஷகீல் மட்டுமே 56 ஓட்டங்களை பெற்றார். 

பந்துவீச்சில் இங்கிலாந்தின் லூயிஸ் கிரிகோரி – 03, கிரேக் ஓவர்டன் 2, கஷிப் மொகமட் 2, மட் பார்கிசன் 2, பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post