ரஷ்ய ஆஸ்பத்திரியில் ஒக்சிஜன் விநியோகத்தில் தடை; கொரோனா நோயாளிகள் 11 பேர் சாவு - Yarl Voice ரஷ்ய ஆஸ்பத்திரியில் ஒக்சிஜன் விநியோகத்தில் தடை; கொரோனா நோயாளிகள் 11 பேர் சாவு - Yarl Voice

ரஷ்ய ஆஸ்பத்திரியில் ஒக்சிஜன் விநியோகத்தில் தடை; கொரோனா நோயாளிகள் 11 பேர் சாவுரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான வடக்கு ஒசேஷியா அலனியாவின் தலைநகர் விளாடிகாவ்காசில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. 

இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் ஒக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரிக்கு ஒக்சிஜன் விநியோகம் செய்ய பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஒக்சிஜன் குழாயில் நேற்று முன்தினம் மாலை திடீரென வெடிப்பு ஏற்பட்டது. 

இதன் காரணமாக நோயாளிகளுக்கான ஒக்சிஜன் விநழயோகம் தடைப்பட்டது.‌ இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு ஒக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வந்து நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்கத் தொடங்கினர். இதன் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post