காபூல் விமானநிலையத்தில் தலிபான்களின் பிடியில் 150 இந்தியர்கள்? தலிபான்கள் மறுப்பு - Yarl Voice காபூல் விமானநிலையத்தில் தலிபான்களின் பிடியில் 150 இந்தியர்கள்? தலிபான்கள் மறுப்பு - Yarl Voice

காபூல் விமானநிலையத்தில் தலிபான்களின் பிடியில் 150 இந்தியர்கள்? தலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 150க்கும் அதிகமான இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேரை தலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாகவும், அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியானது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, காபூல் ஹமீது ஹர்சாய் விமானநிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ள நிலையில், 150க்கும் இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை தலிபான் அமைப்பினர் மறுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post